சாதாரணதர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு வெளியான அறிவிப்பு!

2021 (2022) வருடத்திற்கான கல்வி பொது சாதாரண தர பரீட்சைக்கு தனிப்பட்ட ரீதியில் தோற்றுவதற்கு எதிர்பார்த்துள்ள பரீட்சார்த்திகளுக்கு பரீட்சை திணைக்களம் அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

அதற்கமைய, விண்ணப்பங்கள் இணையவழி ஊடாக மேற்கொள்ளும் முறை குறித்து இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனிப்பட்ட பரீட்சார்த்திகளின் விண்ணப்பங்கள் 2021.12.20ஆம் திகதி தொடக்கம் 2022.01.20ஆம் திகதி வரையில் இணையவழி ஊடாக கோரப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளது.

இதற்கு விண்ணப்பிக்கும் முறை தொடர்பில் ஆலோசனை மற்றும் விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்வது தொடர்பாக இலங்கை பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www..doenets.lk அல்லது Exams SRI LANKA என்ற இணையத்தளத்திற்கு பிரவேசிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply