
யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு வழங்கப்படுகின்ற திட்டங்களை சரியான முறையில் விரைவாக மக்களிடம் வழங்குவதற்கு அனைவரும் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும் என்று யாழ்ப்பாணம் மாவட்டச் செயலர் க.மகேசன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கிராமியப் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஆறு பிரதான பிரிவுகள் ஊடாக நிதி ஒதுக்கப்பட்டு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகிறது.
கிராமத்துக்கு 3 மில்லியன், உள்ளுராட்சி அமைச்சினால் வட்டார நிதியாக 4 மில்லியன், நாடாளுமன்ற உறுப்பினரின் ஒதுக்கீடு 15 மில்லியன், மாவட்ட இணைத்தலைவர் ஊடான ஒதுக்கீடு 100 மில்லியன், அமைச்சர்களின் நிதி ஒதுக்கீடு 64 மில்லியன், மற்றும் மாகாண அமைச்சினால் விரைவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. திட்டங்களை அமுலாக்கும் நிறுவனமாக பிரதேச செயலகங்கள் செயற்பட்டுவரும் நிலையில் அதனை ஒருங்கிணைக்கும் நிறுவனமாக மாவட்ட செயலகம் செயற்படும்.
திட்டங்கள் தொடர்பில் ஏதேனும் நடைமுறை பிரச்சினைகள் ஏற்பட்டால் அதனை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு அலுவலகம் ஊடாக சரிசெய்து கொள்ள முடியும். ஆகவே மக்களுக்கான செயற்திட்டங்களை விரைவாகவும் வினைத்திறனாகவும் உரிய காலப்பகுதியில் நிறைவு செய்வதற்கு அனைவருடைய ஒத்துழைப்பும் அவசியம் – என்றார்.




