இலங்கை பெற்றுக்கொண்ட கடனை திருப்பி செலுத்துவோம் – மத்தியவங்கி ஆளுநர்

இலங்கையினால் பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்கள் அனைத்தும் திருப்பிச் செலுத்தப்படும் என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஆளுநர், இந்த விடயத்தில் பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை எனவும் கேட்டுக்கொண்டார்.

மேலும் இலங்கையிடம் 3 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு கையிருப்பு இருப்பதாக ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் குறிப்பிட்டார்.

எனவே, பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என குறிப்பிட்ட அவர் சமூக ஊடகங்களில் வெளியாகும் கருத்துக்கள் பொய்யான வதந்திகள் என கூறினார்.

இவ்வாறான வதந்திகள் நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் குறிப்பிட்டார்.

Leave a Reply