சிறிய தந்தையின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சிறுமி

கம்பளை – மவுன்ட்டெம்பல் பகுதியில் 14 வயது சிறுமி ஒருவர், சிறிய தந்தையின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.

காதல் விவகாரம் காரணமாக சிறுமியின் சிற்றப்பா நேற்று (21) அவரை தாக்கியுள்ளார்.

இந்த் நிலையில், சிறுமி உடல்நிலை சரியில்லாமல் புலம்பியபோது, ​​சிறுமியின் தந்தை மீண்டும் சிறுமியை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து, சிறுமியை அவரது தாயார் அருகில் உள்ள வீட்டிற்கு அழைத்துச் சென்றதாகவும், பின்னர் மயக்கமடைந்த சிறுமயை கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும், குறித்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கம்பளையில் உள்ள பிரபல மகளிர் பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 14 வயதுடைய நிபுனி நுவந்திகா பண்டார என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் சிறுமியின் தந்தை மற்றும் சிற்றப்பா கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார்மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply