அரச சேவையிலுள்ள கர்ப்பிணிப் பெண்களை வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கு அனுமதி வழங்குவது தொடர்பில் பொது நிர்வாக அமைச்சின் செயலாளரினால் சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இன்று (05) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரச நிறுவனங்களின் பிரதானிகளினது தீர்மானத்திற்கு அமைய, வாரத்துக்கு ஒரு குழுவினர் என்பதன் அடிப்படையில் இரு குழுக்களாக பிரித்து ஊழிர்களை வேலைக்கு அழைப்பது தொடர்பிலான விடயமும் குறித்த சுற்றுநிருபத்தில் உள்ளடக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.