மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கட்டைபறிச்சான் பகுதியில் சுமார் 300 ஏக்கரில் சோளம் பயிரிடப்பட்டுள்ளது.
எனினும் யூரியா பசளை, இரசாயன எண்ணெய் இல்லாமையால் சோளம் பயிர்ச்செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சோளம் செய்கையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
யூரியா உரம் இல்லாமையால் சோளம் வளர்ச்சி குன்றி காணப்படுவதாகவும், நோய்தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளதாகவும் கட்டைபறிச்சான் சோளப் பயிர்ச்செய்கையாளர்கள் கவலை வெளியிடுகின்றனர்.
அரசாங்கம் யூரியா பசளையை நிருத்தியதால் அடுத்துவரும் ஆண்டுகளில் தாம் சோளப் பயிர்ச் செய்கையை கைவிட வேண்டிவருமெனவும் குறிப்பிடுகின்றனர்.
எனவே இது விடயத்தில் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டு யூரியா பசளையை தந்துதவுமாறு கட்டைபறிச்சான் சோளப் பயிர்ச் செய்கையாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.





