சம்பூரில் வறிய குடும்பமொன்றிற்கு வீடு கையளிப்பு

மூதூர் – சம்பூர் பகுதியில் வீடில்லாமல் வாழ்ந்து வந்த வறிய குடும்பம் ஒன்றிற்கான வீடு பயனாளியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

சமுர்த்தி சௌபாக்கியா வாரத்தினை முன்னிட்டு சமூர்த்தி திட்டத்தினூடாக மூதூர் பிரதேச செயலாளர் பிரிவின் சம்பூர் மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் வீடில்லாது கஷ்டங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வந்த குடும்பம் ஒன்றுக்கு அரசாங்கத்தினால் இலவசமாக அமைத்துக் கொடுக்கப்பட்ட வீட்டின் திறப்புவிழாவும் ,பயனாளியிடம் வீடு கையளித்தலும் (22) காலை இடம்பெற்றது.

இவ்வீடானது 2 இலட்சம் ரூபாய் செலவில் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் மூதூர் பிரதேச செயலாளர் எம்.பீ.எம்.முபாரக், மூதூர் சமூர்த்தி முகாமையாளர், பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர், சமூர்த்தி உத்தியோகத்தர்கள் ,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply