கிண்ணியா மீனவ சங்க கட்டிடத்தை உடைத்த மர்ம கும்பல்! ஒருவர் கைது

கிண்ணியா அல் ஹிதாயா மீனவர் கூட்டுறவுச் சங்கத்தின் கட்டிடத்தில் உள்ள பொருட்கள் உடைக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.

குறித்த சம்பவம் இன்று (22) நள்ளிரவு இடம் பெற்றுள்ளதாக கிண்ணியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், கட்டிடத்தின் ஜன்னல்கள் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னணியில் உள்ள சூத்திரதாரியை கண்டு பிடிக்க வேண்டும்.

அண்மையில் சங்க நிருவாக தெரிவு இடம் பெற்றது. இக் கட்டிடத்தில் இரவு 10 மணிக்கு பின்னரே இருந்து விட்டு சென்றேன்.

இவ்வாறான நாசகார வேலைகளை செய்து விட்டுச் சென்றுள்ளனர் என மேலும் தெரிவித்தார்.

திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியில் உள்ள மீனவ சங்க கட்டிடமே இவ்வாறு சேதமாக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரனைகளை கிண்ணியா பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply