அமைச்சர்களான விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார மற்றும் உதய கம்மன்பில ஆகியோருக்கு முதுகெலும்பிருக்கும் பட்சத்தில் அவர்கள் உடனடியாக அரசிலிருந்து வெளியேற வேண்டும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
அரசுக்குள் இருந்துகொண்டு, அரசைப் பாதுகாக்கும் விதத்திலான அரசியலையே குறித்த தரப்புகள் முன்னெடுத்து வருகின்றன.
கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்திய நிறுவனத்துக்கு வழங்க இடமளிக்கமாட்டோம் என்று விமல், வாசு, கம்மன்பில உள்ளிட்டவர்கள் சூளுரைத்தனர். ஆனால், மேற்கு முனையம் வழங்கப்படும்போது மௌனம் காத்தனர்.
ஆரம்பத்தில் போர்ற் சிற்றி சட்டமூலத்துக்குப் போர்க்கொடி தூக்கினர். இறுதியில் இரு கைகளையும் உயர்த்தி ஆதரவு நல்கினர்.
யுகதனவி ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு, ஆனால், அரசின் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலத்தை நிரூபிப்பதற்கு பாதீட்டை ஆதரித்து வாக்களிக்கின்றனர்.
இவர்கள் அரசியல் நாடகம் செய்வது தெளிவு. எனவே, முதுகெலும்பிருந்தால் அரசியிலிருந்து வெளியேறுமாறு சவால் விடுக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் வாங்கவே மாட்டோம்! – மத்திய வங்கி ஆளுநர் கப்ரால் திட்டவட்டம்





