கொரோனா வைரஸ் தொற்றின் பின்னர் பயணக்கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. இன்னும் சில கட்டுப்பாடுகளில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டன.
இந்நிலையில், அரச பணியாளர்கள் அனைவரும், ஓகஸ்ட் 2ஆம் திகதி முதல் கடமைகளுக்கு அழைக்கப்பட்டனர்.
எனினும், அந்த அழைப்பில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அத்துடன், அரச பணியாளர்களை இரண்டு கட்ட சேவைகளுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கர்ப்பிணி தாய்மார்கள், மறு அறிவித்தல் வரையிலும் வீடுகளிலிருந்து பணியாற்றுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.