திருமலையில் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

திருகோணமலை மணிக்கூட்டுக் கோபுரச் சந்தியில் இன்று புதன்கிழமை (22) காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை மீனவர்கள் முன்னெடுத்துள்ளனர்.

திருகோணமலையைச் சேர்ந்த கரையை அண்டிய பகுதியில் தூண்டில் மற்றும் சிறு வளைகளை பயன்படுத்தி தொழில் செய்யும் மீனவர்களே, குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருகோணமலை கடலில் வேறுபகுதி மீனவர்கள் வருகைதந்து சட்டவிரோதமாக கரையோரங்களில் பெரிய வளைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவதால் கரையை அண்டிய பகுதியில் தூண்டில்களையும், சிறிய வளைகளையும் பயன்படுத்தி மீன்பிடிக்கும் தமது தொழிலும், வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இது விடயத்தில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு கரைகளில் மீன்பிடியில் ஈடுபடுவோரை தடை செய்ய வேண்டுமெனவும் ,அனுமதிக்கப்பட்ட பகுதியில் அவர்கள் மீன்பிடிப்பதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, ஆர்ப்பாட்ட இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் மீனவர்களோடு பேசி ஆர்ப்பாட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்.

இவ் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply