பாரம்பரிய கட்டமைப்பிற்கு மட்டுப்படுத்தப்படாத வெற்றிகரமான பயணத்தில் ஈடுபட அனைத்து தரப்பினரும் புத்தாண்டில் உறுதியாக இருக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சரான துமிந்த திஸாநாயக்க அரச அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அனுராதபுரத்தில் அரசியல் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகளிடம் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், புத்தாண்டில் புதிய பயணத்தை ஆரம்பிக்கும் அரசாங்கத்திற்கு ஆதரவளியுங்கள்.
அரச அதிகாரிகள் காலத்திற்கேற்ப மாறி, பரிணமிக்க வேண்டும், கடந்த காலத்தை விட்டு வெளியேற வேண்டும்.
அரச அதிகாரிகளிடையே ஒப்பந்த மனப்பான்மை மாற வேண்டும்.
2022 ஆம் ஆண்டிற்கான இலக்குகளை அடைவதற்கு அரசியல் தலைமைக்கு அதிகபட்ச ஆதரவு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.





