தேரரிடம் பட்டத்தை பெறாதுசென்ற மாணவர்களை வாழ்த்துகின்றேன்! சந்திரிக்கா பெரும் பாராட்டு

கொழும்பு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், வேந்தராக நியமிக்கப்பட்டுள்ள தேரரிடம் பட்டத்தை பெறாதுசென்ற மாணவர்களை வாழ்த்துகின்றேன் என முன்னால் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா தெரிவித்துள்ளார்.

கடந்த 17ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட பௌத்த தேரரை மாணவர்கள் அவமதித்தமை தொடர்பில் தனது முகப்புத்தகத்தில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

ஒரு ஜனநாயக நாட்டில் அரசுக்கு எதிராக அல்லது அரசின் தீர்மானத்துக்கு எதிராக அந்த நாட்டில் வாழும் மக்கள் தமது எதிர்ப்பினை வெளியிட உரிமை உண்டு

அதைத்தான் கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் செய்துள்ளார்கள் குறிப்பாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராக ஒரு பௌத்த துறவி நியமிக்கப்பட்டுள்ளார்.

அது மக்களின் விருப்பமாகவோ அல்லது அரசாங்கத்தின் விருப்பமாகவோ அல்லது அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளின் விருப்பமாகவோ, அல்லது ஒரு கட்ட சமூகத்திடமும் ஆலோசனை பெறாது இடம்பெற்றுள்ளது.

அது ஒரு தனித்துவமான தீர்மானமாக இடம்பெற்றது எனினும் பலரும் அதற்கு தமது எதிர்ப்பினை வெளியிட்டு இருந்தார்கள்.

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் அதனை செயற்பாட்டில் காட்டி இருக்கிறார்கள் ஒரு ஜனநாயக நாட்டில் ஒரு அரசுக்கு எதிராக எதிர்ப்பினை வெளியிடுவதற்கு பூரண சுதந்திரம் உண்டு.

எனினும் அந்த எதிர்ப்பினை அவர்கள் வன்முறையாகவோ குண்டுகளை வெடித்தோ அல்லது போராட்டங்களை செய்தோ இடத்துக்கு இடம் கலவரங்களை ஏற்படுத்தியும் செய்யாது தமது பட்டமளிப்பு விழாவில் அவரை நிராகரித்து இருக்கின்றார்கள்.

அது ஒரு முன்னுதாரணமாகும் வேந்தராக நியமிக்கப்பட்டுள்ள அந்த தேரரிடம் பட்டத்தை பெறாதுசென்ற மாணவர்களை வாழ்த்துகின்றேன்.

அவர்களுடைய தமது எதிர்ப்பினை காட்டிய விதத்தினை நான் மதிக்கின்றேன் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஒரு அரசாங்கத்தின் ஜனநாயகமற்ற செயற்பாட்டுக்கு அந்த மாணவர்கள் தமது பதிலடியை ஜனநாயக ரீதியில் வழங்கியுள்ளார்கள்.

குறித்த செயற்பாட்டிற்கு போராட்டங்களை மேற்கொண்டு குண்டுகளை வெடிக்கவைத்து வன் முறையை தூண்டி வெளியிடாது படித்த இளைஞர்கள் தமது எதிர்ப்பினை ஜனநாயக ரீதியில் வெளியிட்டுள்ளார்கள் என தெரிவித்துள்ளார்.

நாட்டின் சிரேஷ்ட தலைவர் என்ற ரீதியில் அந்த சம்பவம் தொடர்பில் நான் கருத்து ஒன்றை பதிவிட விரும்பியே இந்த பதிவினை வெளியிட்டு உள்ளேன் என தனது முகப்புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply