மக்களுக்கு எந்த தூதுவர் உதவி செய்ய வந்தாலும் நாம் தடுக்க மாட்டோம் – அங்கயன் எம்.பி

எமது மக்களுக்கு எந்த தூதுவர் உதவி செய்ய வந்ததாலும் நாம் தடுக்க மாட்டோம் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கயன் ராமநாதன் தெரிவித்தார்.

இன்றைய தினம் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்க்கண்டவாறு தெரிவித்தார்.

குறித்த ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு கீழ்கண்டவாறு பதிலளித்துள்ளார்.

கேள்வி :வடக்கில் இடம்பெறும் சிறுவர் வன்கொடுமைகள் தொடர்பாக உங்கள் நிலைப்பாடு ?

பதில் : சகோதரி வித்தியாவுக்கு பின்னர் யாழ்ப்பாணத்தில் சிறுவர்கள் தொடர்பான வன்கொடுமைகள் நடைபெற கூடாது என்று நான் விரும்பினேன்.ஆனால் இப்போதும் வன்கொடுமைகள் தொடர்கிறது.இதனை இப்படியே விட முடியாது.சிறுவர்,பெண்களுக்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சு உரிய நடவடிக்கை எடுக்கும்.

கேள்வி :நாட்டில் டொலர் பற்றாக்குறை நிலவும் நேரத்தில் அபிவிருத்தி பணிகள் சாத்தியமா?

பதில் :உற்பத்தி அதிகரித்தல் மாத்திரமே நாட்டில் டொலர் தங்கி நிற்கும்.அதற்காக குறுங்கால பிரச்சினையாக காணப்படும் பொருளாதாரத்தை காரணம் காட்டி,அபிவிருத்தி பணிகளை கைவிட முடியாது.85 ஆயிரம் மில்லியன் ரூபா கிராம மட்ட அபிவிருத்தி பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

கேள்வி:தற்போது தமிழ் கட்சிகள் சில ஒன்றிணைந்து ,இந்தியாவிற்கு அறிக்கை ஒன்றை அனுப்புவதற்கு தயாராகி வருகின்றனர்.

பதில் :இவர்கள் இன்று சேருவார்கள் நாளை பிரிவார்கள்,அடுத்த நாள் சண்டை பிடிப்பார்கள்,இது எல்லாம் தேர்தல் கால நாடகங்கள்.தேர்தலுக்கு முதல் பிரிவார்கள்,வாக்குகளை பெற்று வெற்றி பெற்ற பின்னர் சேருவார்கள்.பொங்கல்,தீபாவளி ,அடுத்த வருடம் தீர்வு என்று கூறுகிறார்கள் பாப்போம்.

கேள்வி :தமிழக மீன்வர்களின் எல்லை தாண்டிய மீன்பிடி தொடர்பாக ?

பதில் :கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் விடுவிக்க பட வேண்டடி வரும்.ஏனென்றால் இரண்டு நாடுகளின் நல்லிணக்கம் தொடர்பில் இது தங்கியுள்ளது.ஆனால் இவ்வாறு எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடுபவர்கள் தடுக்கப்படவேண்டும்.அதில் மாற்றுக்கருத்து இல்லை.

கேள்வி : மருத்துவர்களின் பணிப்புறக்கணிப்பு தொடர்பில்.

பதில் :கடந்த வருடத்தை விட இந்த வருடம் போராட்டங்கள் குறைவு.கொரோனா நிலவும் இந்த கடுமையான கால கட்டத்தில் இந்த பணிப்புறக்கணிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது.

கேள்வி :வடக்கு மாகாணத்துக்கு சீனாவின் வருகை

பதில் :யாழ்ப்பாணம் கடந்த காலத்தில் அநேகமானவற்றை இழந்துள்ளது.அவற்றை மீள பெற்று நாம் அபிவிருத்தி அடைய வேண்டும்.அதற்கு இலங்கை அரசின் நிதி போதாது.ஆகவே எந்த நாடு எமக்கு உதவ முன்வந்தாலும் நாம் அதை ஏற்றுக்கொள் வேண்டும்.அதற்காக நாம் இந்தியாவை வெறுப்பது என்று இல்லை.போரின் பின்னர் அன்றும் இன்றும் எமக்கு அவர்கள் நிறைய உதவிகள் செய்கிறார்கள்.அதை நாம் மறக்க மாட்டோம்.

Leave a Reply