பெண்கள் விடுதிக்குள் நுழைந்த நபர் தவறி விழுந்து உயிரிழப்பு

மருதானை – எஸ்.மஹிந்த மாவத்தையில் நான்கு மாடி கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் ஏறாவூரைச் சேர்ந்த 30 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த அடுக்குமாடி குடியிருப்பு பெண்கள் விடுதி எனவும், அனுமதியின்றி அடுக்குமாடி குடியிருப்பிற்குள் நுழைந்த நபர், பாதுகாவலர் ஓடி வருவதைக் கண்ட போது அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தவறி விழுந்துள்ளதாக மருதானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனை இன்று நடைபெறவுள்ளது.

Leave a Reply