அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேச சபையின் 2021 டிசம்பர் மாதத்திற்கான 04 ஆவது சபையின் 45வது கூட்டமர்வு நேற்று நடைபெற்றது.
நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம் தாஹீர் தலைமையில், பிரதேச சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்ற கூட்டமர்வுவின் போது, 2021 நவம்பர் மாதத்திற்கான கூட்டறிக்கை உறுதிப்படுத்தல், 2021 நவம்பர் மாதத்திற்கான கணக்கறிக்கை உறுதிப்படுத்தல், தவிசாளர் எம் .எ . எம் . தாஹிர் உரை என்பன இடம்பெற்றன.
பின்னர் 2022 ஆம் ஆண்டு செலவினங்களுக்கான முன்னங்கீகாரம் பெறுதல் மற்றும் 2022 ஆம் ஆண்டு முன்பள்ளி பாடசாலைகளை ஆரம்பிப்பது பொதுச்சந்தை தொடர்பில் உறுப்பினர்களின் கருத்துக்கள் சபையில் தவிசாளரினால் கேட்கப்பட்டது.
பிரதேச அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் குழுக்கள் அமைத்தல் மற்றும் எமது பகுதி சார்பில் கல்வி மற்றும் விளையாட்டு துறைகளில் சர்வதேச ரீதியில் வெற்றிபெற்றவர்களை கௌரவித்தல் தொடர்பில் ஆராயப்பட்டது.
மேலும், அஸ்பர் ஜே.பியின் முன்மொழிவுகள் உள்ளடங்கலாக இக்கூட்ட அமர்வில் கலந்துரையாடப்பட்டதுடன், கடிதங்கள் வாசிக்கப்பட்டு தீர்மானங்களும் பெறப்பட்டது.






