நாட்டில் யாரும் முத்தமிட வேண்டாம்! அரசின் அதிரடி அறிவிப்பு

கடந்த புத்தாண்டு காலத்தில் உருவாகிய கொரோனா கொத்தணியை சமாளிப்பதற்கு நாம் பெரும் பாடுபட்டுள்ளோம். ஆகவே, இம்முறை கிறிஸ்துமஸ் கொத்தணியை உருவாகாமல் தடுக்க வேண்டும் என தேசிய தொற்று நோய்கள் நிறுவனத்தின் பணிப்பாளர் டாக்டர் ஹசித அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

மக்கள் நத்தார் பண்டிகையை கொண்டாட ஆர்வமாக உள்ளனர். எனினும் புத்தாண்டு கொத்தனி போன்ற அசம்பாவித சம்பவங்கள் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவதன் மூலம் தவிர்க்கப்பட வேண்டும்.

கடந்த முறையும் புத்தாண்டு கொத்தணி உருவாகும் என்று நாம் கூறினோம். ஆனால் மக்கள் அதனை கண்டுகொள்ளவில்லை.

இந்த தடவையென்றாலும், வீடுகளிற்கு மளிகை பொருட்களை வாங்கும் நேரத்தை குறையுங்கள். சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வணிகர்கள் முன்வரவேண்டும்.

கடையில் காற்றோட்டத்தை கவனித்துக் கொள்ளுங்கள். வாழ்த்துக்களைத் தெரிவிக்க முத்தமிடாதீர்கள். இடைவெளியை பேணுங்கள், பண்டிகைக் காலங்களில் மது அருந்துவது மிகவும் பொருத்தமற்ற விடயமாகும். தடுப்பூசி செலுத்திக்கொள்வது மிகவும் முக்கியம் என தெரிவித்துள்ளர்.

அம்பாறை ஊடகவியலாளர் ஒருவருக்கு கொலை அச்சுறுத்தல்: பிரதி பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு!

Leave a Reply