புத்தளத்தில் ரயிலில் மோதி பெண் மரணம்!

புத்தளத்தில் ரயிலில் மோதுண்டு பெண் ஒருவர் உயிரிழந்தார்.

மாரவில பொலிஸ் பிரிவில் கொழும்பு – சிலாபம் ரயில் பாதையில் சிறிய பாலத்துக்கு அருகில் ரயிலில் மோதுண்டு குறித்த பெண் உயிரிழந்தார்.

மாதம்பை பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயது யுவதியே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.

கொழும்பு நோக்கிப் பயணித்த ரயிலில் மோதுண்டே குறித்த யுவதி உயிரிழந்தார்.

பிரேத பரிசோதனைக்காக மாதம்பை வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டில் யாரும் முத்தமிட வேண்டாம்! அரசின் அதிரடி அறிவிப்பு

Leave a Reply