வவுனியா கொக்குவெளிப்பகுதியில் கிணற்றில் நீராடச்சென்று உயிரிழந்த சிறுவனுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
வவுனியா – கொக்குவெளிப்பகுதியில் மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்த சிறுவன் அருகில் உள்ள, கிணற்றில் குளிக்கச்சென்ற நிலையில் கிணற்று நீரினுள் மூழ்கி உயிரிழந்தார்.
இந்நிலையில், கிராம மக்களின் முயற்சியால் கிணற்றுநீர் வெளியில் இறைக்கப்பட்டு நேற்றுமுன்தினம் இரவு 11.30 மணியளவில் குறித்த சிறுவனின் சடலம் மீட்கப்பட்டது.
குறித்த சிறுவனுக்கு முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனாத் தொற்று பீடித்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.
அவரது சடலத்தினை சுகாதார நடைமுறைகளை பேணி எரியூட்டுவதற்கு சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.





