எரிவாயு வெடிப்பிற்கு ஒரு குடும்பத்திற்கு 25 லட்சம் இழப்பீடு! எதிர்க்கட்சி விடாப்பிடி

அரசின் அக்கறையின்மையால் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு வெடிப்பிற்கு நட்டஈடாக ஒரு குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாவை அரசாங்கம் வழங்க வேண்டும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஹரிசன் வலியுறுத்தியுள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது,

தயவு செய்து எரிவாயு வெடிப்புக்கு வழி சொல்லுங்கள். அவர்கள் போருக்கு சென்றோ அல்லது சண்டை இட்டோ பாதிப்புக்கு உள்ளாகவில்லை.

அன்றாட வாழ்க்கையில் தம் உணவு உண்ண சமைக்க சென்றவேளையில் ஏற்பட்ட பரிதாபம் இது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு குறைந்தது 25 இலட்சம் தர வேண்டும்.

ஜனாதிபதி முன்நின்று இதை வழங்க வேண்டும். இதற்கு டொலர் தேவை இல்லை.

அதேபோன்று எண்ணெய் மோசடி, சீனி மோசடி அனைத்தும் நிறைவுக்கு வருவதற்கு முன்னர் எரிவாயு வெடிப்பு பிரச்சினைக்கு தீர்வு தாருங்கள்.

கனிய எண்ணெய் விலை உயர்வு, என்ன இது? டொலர் சேர்த்து வைத்து கொள்ள விலை உயர்வு சரியா? இவ்வாறு விலை உயர்த்தி கொண்டு போனால் என்ன செய்வது.

இவ்வாறு விலை உயர்வு கடைசியில் ஒரு வேளை மாத்திரம் உண்ண வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டும்.

எனவே உங்களுக்கு முடியாவிடில் வேறு ஒருவரிடம் நாட்டை கையளிங்கள் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply