யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு, முள்ளியானில் நேற்றுமுன்தினம், மீன்பிடிக்க சென்று, வீட்டிற்கு திரும்பிய மீனவர் மீது பாதுகாப்புப் படைப்பிரிவினர் கொடூர தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட நபர் யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழுவின், யாழ்ப்பாணம் காரியாலயத்தில் இன்று பிற்பகல் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.
குறித்த தாக்குதலை 5 பேர் மேற்கொண்டதாக பாதிக்கப்பட்ட மீனவரான ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது,
நான் மீன் பிடிப்பதற்கு கடலுக்கு சென்ற நேரம், பாதுகாப்புப் படைப்பிரிவினர் ஐவர் அடங்கிய கும்பல், எனது வீட்டிற்கு சென்று என்னை விசாரித்தனர்.
இதன்போது, பயந்து நடுங்கிய எனது குடும்பஸ்தவர்கள் எனக்கு தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டு என்னை வீட்டிற்கு வருமாறு அழைத்தனர்.
தொலைபேசி அழைப்பினை தொடர்ந்து நானும் வீட்டிற்கு வந்தேன். அப்போது அங்கிருந்தவர்கள் எனது கை மற்றும் கால்களை கட்டி விட்டு அவர்கள் வந்த ஜீப்பிற்குள் என்னை ஏற்றிவிட்டு விக்கெட் மற்றும் கொட்டனால் என்னை தாக்கினர் எனக் குறிப்பிட்டிருந்தார்.
நான் கஞ்சா கடத்துவதாக அவர்கள் தெரிவித்தனர் என முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.





