திருகோணமலை நகரை அண்மித்த கடல் பிராந்தியத்தில், சிறு வள்ளங்களை உபயோகித்து, தூண்டில்கள் மூலமாக மீன்பிடியில் ஈடுபடும் மீனவ சமூகத்தினர், இன்று மணிக்கூண்டு கோபுரத்தின் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மீன்பிடியில் ஈடுபடும் கடற்பகுதியில் ஒரு சில பாரிய மீனவப் படகுகள், வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவதன் காரணமாக, தாம் மீன்பிடியில் ஈடுபடும் பகுதிகளில் மீன்வளம் பாதிப்பிற்குள்ளாவதாக தெரிவித்துள்ளனர்.
போராட்ட பேரணி, திருகோணமலை மணிக்கூட்டு கோபுரத்தில் இருந்து வடகரை வீதியூடாக கடல் முக வீதி வரை சென்றுள்ளது.
இதன்போது, பொலிஸாரால் வீதித் தடை ஏற்படுத்தப்பட்டு, இடை மறிக்கப்பட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, மீண்டும் மணிக்கூட்டுக் கோபுர சந்தியில் ஒன்றுகூடிய மீனவர்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.






