வடக்கில் எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கிவைப்பு

யாழ். சுகவாழ்வுக்கான பயணம் அமைப்பினால், வடமாகாணத்தில் எயிட்ஸ் தொற்று நோயினால் பாதிப்படைந்தவர்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு இன்று யாழ். மாவிட்டபுரம் பகுதியில் நடைபெற்றது.

சுகவாழ்வு நிறுவனத்தின் தலைவர் குணராஜா நக்கீரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், மகளிர் அணித் தலைவியும் சுகவாழ்வு நிறுவனத்தில் பொருளாளரும் ஆகிய வாசுகி சுதாகர், யாழ். போதனா வைத்திய சாலையின் முன்னாள் பணிப்பாளர் நாச்சினார்கினியன், யாழ். போதான வைத்தியசாலையின் பாலியல் நோய் பிரிவு வைத்திய நிபுணர் துலாரி லியனகே, கல்விக்கரம் உதவி மையத்தின் இயக்குநர் கருணாகரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

Leave a Reply