வவுனியாவில் தனியார் வைத்தியசாலையிலிருந்து பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டவர் மரணம்!

வவுனியாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட தமது உறவினர் பல நாள் சிகிச்சையின் பின்னர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்ததுள்ளனர்.

இது தொடர்பில் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

வவுனியாவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் காய்ச்சல் காரணமாக தமது உறவினரை சில நாட்களுக்கு முன்னர் அனுமதித்தோம்.

எனினும், அவரின் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு நாம் முயற்சி செய்திருந்தோம்.

அதற்காக கொழும்பில் இருந்து வைத்தியர்கள் வந்த போதிலும், அவர்கள் நோயாளியின் உடல் நிலை மோசமாக உள்ளதால் கொழும்புக்கு கொண்டு செல்ல முடியாது என எமக்கு தெரிவித்தனர்.

அப்போதுதான் எமது உறவினர் கடும் நோய்வாய்ப்பட்டுள்ளது தெரியவந்தது.

இந்நிலையில், நேற்று இரவு நோயாளர் கட்டிலுடன் ஒட்சிசன் ஏற்றியவாறு எமது உறவினரை வவுனியா பொது வைத்தியசாலையில் குறித்த தனியார் வைத்தியசாலையினர் அனுமதித்தனர்.

எனினும், அவரின் உடல் நிலை மோசமாக காணப்பட்டதால் அவர் அதிகாலை 3 மணியளவில் மரணமடைந்துவிட்டார்.

குறித்த தனியார் வைத்தியசாலையினர் பல இலட்சங்களை தம்மிடம் பெற்றபோதிலும், அவரின் நோயை சுகப்படுத்தவில்லை எனவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

கொரோனா தொற்று தொடர்பில் வெளியான தகவல்கள்!

Leave a Reply