வரலாற்றில் முதன்முறையாக பட்டயப் பொறியியலாளர் ஒருவர், பிரதி பொலிஸ்மா அதிபர் பதவிக்கு பொலிஸ் திணைக்களத்தால் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
தென் சூடானில் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையில் துஷார கம்லத உறுப்பினராகப் பணியாற்றியதோடு, சர்வதேச அளவில் பல விரிவுரைகளையும் அவர் நடத்தியுள்ளார்.
பிரதி பொலிஸ்மா அதிபராக பதவி உயர்த்தப்பட்டுள்ள துஷார கம்லத், கொழும்பு ஆனந்தா கல்லூரியின் பழைய மாணவர் என்பதுடன் தொலைத்தொடர்பு அறிவியலில் முதுகலைப் பட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது.





