வடக்கில் அபிவிருத்தி திட்டங்களினூடாக கொள்ளையடித்த மஹிந்த அரசாங்கம்! சம்பிக்க குற்றச்சாட்டு

வடக்கில் முக்கிய அபிவிருத்தி திட்டங்களினூடாக 400வீதத்தை கொள்ளையடித்தது மஹிந்த அரசாங்கம் என பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும், கடந்த 2010 இல் தமிழ் மக்களுடன் ஒரு கூட்டம் இடம்பெற்றது. அன்று அந்த கூட்டத்தில் மக்களுக்கு நான் சொன்னேன் ‘பாருங்கள், ஏ9 வீதி சீரமைக்கப்படுகின்றது. இதன் பின்னர் தெற்கு மக்கள் வடக்கிற்கு செல்லலாம் வடக்கு மக்கள் தெற்கிற்கு செல்லலாம் அதே போல் இந்தப்பகுதி மக்களுக்கு தேவையான பொருட்களும் இந்த பாதையூடாக கொண்டுவரப்படும் என்று பெரிதாக கூறினேன்.

அதேபோல் யாழ்தேவி புகையிரதம் செல்லும் புகையிரத பாதை சீர்செய்து திறக்கப்பட்ட பின்னர் கொழும்பில் இருந்து 3 மணிநேரத்தில் யாழ்ப்பாணத்திற்கும், யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பிற்கும் இலகுவாக பயணிக்க முடியும் என நான் பெருமையாக கூறினேன்.

பின்னர் புகையிரத சேவையில் சிரேஸ்ட நிபுணர் ஒருவர் என்னை சந்தித்து ஒரு விடயத்தை கூறினார். இங்கு நாட்டை அபிவிருத்தி செய்யும் திட்டம் இடம்பெறவில்லை. மாறாக பாரிய கொள்ளை சம்பவம் ஒன்றே இடம்பெறுவதாக கூறினார்.

இந்தியாவின் இல்கோன் என்ற நிறுவனம் தான் வடக்கிற்கு இந்த புகையிரத பாதையை அமைகின்றது. அவர்கள் இந்த திட்டத்தை நாம் கூறிய விலையை விட 4 மடங்கு அதிகமான விலையில் தான் செய்கின்றனர். நாம் இதை செய்திருந்தால் 4இல் ஒரு பங்கில் செய்திருக்கலாம். ஆனால் இவர்கள் 100வீதத்திற்;கு 400வீதம் அதிகமாகவே கொள்ளையடிக்கிறார்கள்.

இதை கேட்டு நான் அதிர்ந்து போனேன். இதே போல் ஏ9 பாதையை சீரமைக்கும் நிறுவனத்தின் பிரதான பொறியியலாளர் என்னிடம் வந்து அப்போது கூறினார் அதே நிலைதான் இந்த பாதைக்கும் என்று கூறினார்.

இந்த பாதையை சீரமைக்க பொறுப்பேற்றுள்ள நிறுவனம் கெட்டிக் என்ற ஒரு நிறுவனம் ஆகும். அது சீனாவின் விமான நிறுவனம். அந்த நிறுவனம் இந்த திட்டத்தை மேலும் 2 நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது. 4 இல் ஒரு வீத விலைக்கே அங்கும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே 100வீதத்திற்;கு 400வீதம் அதிகமாகவே கொள்ளையடிக்கப்பட்டது.

இது தொடர்பாக நான் சிந்தித்துக்கொண்டே கொழும்பிற்கு வந்து அன்று இவற்றின் உண்மை தன்மை தொடர்பாக தேடி பார்த்தேன்.

அன்று நாட்டில் செய்யப்பட்ட அனைத்து வேலைத்திட்டங்களுக்கும் சென்ற செலவுகள் தொடர்பாக நான் 3, 4 மாதங்களுக்கு தேடினேன்.

நான் மேற்கொண்ட ஆய்வில் அவர்கள் கூறியது அனைத்துமே உண்மையென நிரூபனமானது.

இது பற்றி நான் மஹிந்த ராஜபக்சவுக்கு அறிவித்தேன். அவரை சென்று சந்தித்து இது பற்றி கூறினேன். அவர் அன்று என்னை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

இவற்றை எழுதி அனுப்ப முடியாதா என கேட்டார். நான் அவர் கேட்டதை போன்று தமிழ் பத்திரமொன்றை தயாரித்து அனுப்பினேன்.

ஆனால், எந்தவொரு விசாரணையும் இடம்பெறவில்லை. எனக்கும் அமைச்சரவை பொறுப்புக்களை செய்யவிடவில்லை. இதை அறிந்துகொண்டு நானாகவே விலகி வந்துவிட்டேன் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply