மன்னாரில் தீயில் எரியூட்டப்பட்ட கேரளக் கஞ்சா பொதிகள்

மன்னாரில் 15 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரளக் கஞ்சா போதைப்பொருட்கள் எரியூட்டப்பட்டுள்ளது .

மன்னார் நீதிவான் நீதிமன்றில் சான்றுப்பொருள்களாகக் காணப்பட்ட 791 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருட்கள், பொதுச் சுகாதாரப் பரிசோதகரின் பரிந்துரையில் பள்ளிமுனை கடற்கரையில் இன்று பிற்பகல் எரியூட்டப்பட்டு அழிக்கப்பட்டது.

இதன்மூலம் கடந்த 3 மாதங்களில் ஆயிரத்து 941 கஞ்சா போதைப்பொருள் மன்னார் நீதின்றினால் எரியூட்டப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.

மன்னார் நீதிமன்ற நீதிவான் பெருமாள் சிவகுமார் முன்னிலையில் அவரது அறிவித்தலில், பதிவாளர் தர்ஷிகா தர்ஷனின் ஏற்பாட்டில் இவ்வாறு போதைப்பொருள் சான்றுப்பொருள்கள் அழிக்கப்பட்டன.

2017ஆம் ஆண்டு தொடக்கம் 2021ஆம் ஆண்டு வரையில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 10 வழக்குகளின் கஞ்சா போதைப்பொருளே எரியூட்டப்பட்டு அழிக்கப்பட்டது.

நிலுவையில் உள்ள வழக்குகளின் சான்றுப்பொருளாகக் காணப்படும் போதைப்பொருள்களில் ஒரு பகுதியை மாதிரியாக வைத்து மிகுதியை அழிக்குமாறு நீதிச் சேவை ஆணைக்குழு சுற்றறிக்கை மூலம் அறிவித்திருந்தது.

அதனடிப்படையிலேயே இந்த நடவடிக்கை மன்னார் நீதிவான் நீதிமன்றினால் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வரலாற்றில் முதன்முறையாக பட்டயப் பொறியியலாளர் பிரதி பொலிஸ்மா அதிபராக பதவி உயர்வு

Leave a Reply