தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் சமகால அரசியல் உரை அரங்கு நிகழ்வு எதிர்வரும் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணி தொடக்கம் 5 மணிவரை நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில், சமூக செயற்பாட்டாளர் இ.செல்வின் தமிழர் தாயக அபிவிருத்தியில், அரசியலின் வகிபாகம் என்னும் தலைப்பிலும், யாழ் பல்கலைக் கழகத்தின் ஊடாக கற்கைகள் துரையின் தலைவர் கலாநிதி சி.ரகுராம் தமிழ்த் தேசிய அரசியலில் சிவில் அமைப்புகளின் வகிபாகம் என்னும் தலைப்பிலும், யாழ்ப்பாண பல்கலைக்கழக அரசறிவியல் துறையின் தலைவர் பேராசிரியர் கே.ரி கணேசலிங்கம் தமிழ்த் தேசிய அரசியலில் பூகோள அரசியலின் வகிபாகம் என்னும் தலைப்பிலும் உரையாற்றவுள்ளனர்.





