பால்மா தட்டுப்பாடு நீடிக்கலாம்! வெளிவந்த புதிய தகவல்

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பால்மாவுக்கான தட்டுப்பாடு மேலும் இரண்டு மாதங்களுக்கு நீடிக்கலாம் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட பால்மாவை கொள்வனவு செய்வதற்கு டொலர்கள் இல்லாததால், வங்கிகள் ஊடாக கடன் கடிதங்களை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அதன் ஊடகப் பேச்சாளர் அசோக பண்டார தெரிவித்துள்ளார்.

எனினும், இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான தட்டுப்பாடு காரணமாக நுகர்வோர் அசௌகரியங்களுக்கு உள்ளாவதை தடுக்க, உள்நாட்டு பால் மா நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

வெலிகமவில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம்!

Leave a Reply