மருத்துவத்துறையில் எவ்வித அரசியல் தலையீடுகள் மேற்கொள்ளவில்லை என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
காலியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், மருத்துவ துறையில் அரசியல் தலையீடு இருப்பதாக யாராவது நிரூபித்தால், நாளைய தினமே தான் அமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.





