பொருள்கள் விலைகள் மேலும் அதிகரிக்கும்! ஜோன்ஸ்டன்

பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கும். கடினமான விடயமாக இருந்தாலும் அதனைச் செய்தாக வேண்டிய நிலைமையே உள்ளது என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

கொரோனாப் பெருந்தொற்று நிலைமை முழுமையாகக் கட்டுக்குள் வரும்வரை, இந்நிலைமைக்கு நாம் முகங்கொடுத்தாக வேண்டும்.

உணவுப் பொருட்களின் விலைகள் மற்றும் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படுவதை நாமும் விரும்பவில்லை.

அனைவருக்கும் இதனால் பாதிப்பு. விருப்பம் இல்லாவிட்டால்கூட அதிகரிப்பைச் செய்தாக வேண்டிய நிலைமையே காணப்படுகின்றது என்றார்.

Leave a Reply