தென்னாபிரிக்காவில் கடந்த மாதம் 24ஆம் திகதி முதன் முதலாக கண்டறியப்பட்டு தற்போது உலகை உலுக்கி வரும் ஒமிக்ரான் வைரஸ், இந்த ஒரு மாத காலத்தில் 106 நாடுகளில் பரவி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
ஐரோப்பாவிலும், ஆபிரிக்காவிலும், அமெரிக்காவிலும் கொரோனா தொற்று அதிகரிக்க இந்த ஒமிக்ரான் திரிபுதான் காரணம் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
ஒமிக்ரான் வைரஸ் ஆபத்து அதிகளவில் தொடர்வதாகவும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதே நேரத்தில் தென்னாபிரிக்காவில் இந்த ஒமிக்ரான் தொற்று பாதிப்பு உச்சம் அடைந்து, தற்போது குறையத்தொடங்கி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
அந்த வகையில் கடந்த வியாழக்கிழமை ஒரு நாளில் 27 ஆயிரம் பேருக்கு இந்த தொற்று பாதிப்பு ஏற்பட்டது. நேற்று இது 15 ஆயிரத்து 424 ஆக குறைந்துள்ளது.





