பொதிகள் ஏற்றுக்கொள்ளப்படாது: ரயில் நிலைய அதிபர்கள் அதிரடி!

ரயில் நிர்வாகத்தின் தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ரயில் நிலைய அதிபர்கள் நேற்று நள்ளிரவு முதல் பொதிகளை ஏற்றுக்கொள்வதை இடைநிறுத்துவதாகவும், நாளை முதல் பயணச்சீட்டு வழங்குவதைத் தவிர்ப்பதாகவும் இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ரயில் நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் இன்றி திடீரென பொதிகளை ஏற்றுக்கொள்வதை இவ்வாறு ரத்து செய்ய தீர்மானித்துள்ளமையினால், மக்களின் குறிப்பிட்ட சில பொதிகளில் உள்ள பொருட்கள் பழுதடையும் வாயப்புகளும் இருக்கின்றன.

இதேவேளை, இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தினர் எதிர்வரும் 26ஆம் திகதி முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இன்றிலிருந்து பாடசாலைகளுக்கு விடுமுறை!

Leave a Reply