வடமராட்சி – பருத்தித்துறையில் கூலர் ரக வாகனம் மோதி விபத்தில் சிக்கி படுகாயமுற்றிருந்த முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்;.
ஞானியார் வளவு, வியாபாரிமூலை, பருத்தித்துறையை சேர்ந்த 80 வயதுடைய பரஞ்சோதி சற்குணநாதன் என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.
கடந்த 18ஆம் திகதி கூலர் ரக வாகனம் மோதியதில் படுகாயமடைந்த இவர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
அங்கிருந்து கடந்த திங்கட்கிழமை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், நேற்று பிற்பகல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தன் சிவராசா விசாரணைகளை மேற்கொண்டார். பிரேத பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இவ்விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட வாகன ஓட்டுநர் காயம் காரணமாக பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
குறித்த முதியவர் உயிரிழந்ததை அடுத்து, அவர் மீண்டும் கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பை கண்டித்து ஜே.வி.பி. ஆர்ப்பாட்டம்!





