கிழக்கு ஆபிரிக்காவில் இருக்கும் தீவு நாடான மடகாஸ்கரில் இடம்பெற்ற பயங்கர ஹெலிகொப்டர் விபத்தில் 39 பேர் பலியாகினர்.
அந்தக் ஹெலிகொப்டரில் பயணம் செய்தவர்களில் இருவர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டனர். அதில் ஒருவர் அந்நாட்டு அமைச்சர் பதவியில் இருக்கும் செர்ஜ் கெல்லே.
உயிருடன் தப்பி பிழைத்த மடகாஸ்கர் நாட்டு அமைச்சர் செர்ஜ் கெல்லே இதுதொடர்பில் தெரிவிக்கையில்,
‘நான் மரணமடையும் நேரம் இன்னும் வரவில்லை’ என்று அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் செர்ஜ் கெல்லே ஹெலிகொப்டரில் உள்ள ஒரு இருக்கையை பயன்படுத்தி, 12 மணி நேரம் கடலில் நீந்தி உயிர் பிழைத்துள்ளார். அவருடன் சேர்ந்து இன்னொரு நபரும் நீந்திக் கரை சேர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





