
பண்டிகைக் காலங்களில் கொழும்பிலும் அதனைச் சூழவுள்ள மக்களின் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும், திருடர்கள் மற்றும் குற்றவாளிகளை கையாள்வதற்கு அதிகமான பொலிஸ் அதிகாரிகளை சிவில்களில் ஈடுபடுத்துமாறு அமைச்சர் அறிவுறுத்தினார்.





