குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை!

மாத்தறை, அக்குரஸ்ஸ பொலிஸ் பிரிவில் குடும்பஸ்தர் ஒருவர் கத்தியால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் எனப் பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது.

பபரந்த, கோட்டேகொட பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயது நபரே இவ்வாறு உயிரிழந்தார்.

குறித்த நபர், தலஹகம, பெலிகெட்டிய பிரதேசத்திலுள்ள அவரது வீட்டில் சுத்திகரிப்புப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது அயல்வீட்டுக்காரருடன் முறுகலில் ஈடுபட்டுள்ளார்.

இருவருக்கும் இடையிலான முறுகல் கைகலப்பில் முடிந்த நிலையில், அயல்வீட்டுக்காரரின் மகன் குறித்த நபரைக் கத்தியால் வெட்டியுள்ளார்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், அக்குரஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply