இரவில் மக்கள் தூங்கும்போது பொருட்களின் விலைகளை அதிகரிப்பது அரசாங்கத்தின் சமீபத்திய கொள்கை – எதிர்க்கட்சி

<!–

இரவில் மக்கள் தூங்கும்போது பொருட்களின் விலைகளை அதிகரிப்பது அரசாங்கத்தின் சமீபத்திய கொள்கை – எதிர்க்கட்சி – Athavan News

எரிபொருள் விலை அதிகரிப்பை அரசாங்கம் உடனடியாக இடைநிறுத்தி மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது.

எரிபொருள் விலையை மீண்டும் அதிகரிப்பதன் மூலம் மக்களை மீண்டும் சங்கடத்திற்கு உள்ளாக்கியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “இரவில் மக்கள் தூங்கும்போது உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதும் பொருட்களின் விலைகளை அதிகரிப்பதும் அரசாங்கத்தின் சமீபத்திய கொள்கை என தெரிவித்துள்ளார்.


Leave a Reply