1913ஆம் ஆண்டுக்கு பின் யாழில் இம்முறை அதிக மழை வீழ்ச்சி!

யாழ்ப்பாண மாவட்டத்தில் அனர்த்த முன் ஏற்பாடு தொடர்பாக, ஊடகவியலாளார்களுக்கு தெளிவூட்டும் கருத்தமர்வு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்று காலை இடம்பெறுகிறது.

மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினால் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த கருத்தமர்வில், வறட்சி, மழை, புயல் காற்று தொடர்பில் கடந்த கால நிலவரங்கள் மற்றும் எதிர்கால பாதுகாப்பு முறைகள் தொடர்பில் ஆராயப்படுகிறது.

குறிப்பாக இந்த வருடம் மழை வீழ்ச்சி அதிகமாக காணப்படுகிறது. 1913 ஆம் ஆண்டுக்கு பின்னர் அதிக மழைவீழ்ச்சி பதிவாகிய ஆண்டாக இந்த ஆண்டு இருப்பதாக துறை சார்ந்த அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply