சு.க. – ஜே.வி.பி. இணைந்து கூட்டணி அமைக்கலாம்! தயாசிறி அதிரடி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஜே.வி.பியும் இணைந்து கூட்டணியொன்றை உருவாக்கலாம். இதற்கு எவ்வித தடையும் கிடையாது. இதற்கு முன்னரும் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

மேலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது தற்போது தூய்மையான அரசியல் கட்சியாக உள்ளது. மோசடியாளர்கள் வெளியேறிவிட்டனர்.

அதேபோல் ஜே.வி.பியும் தூய்மையான கட்சி. இதற்கு முன்னரும் கூட்டணி அமைத்துள்ளோம். எனவே, இணைந்து செயற்படுவதில் சிக்கல் வராது.

அதேவேளை, இடதுசாரி சக்திகள் ஓரணியில் திரளவேண்டும் எனவும் தயாசிறி அழைப்பு விடுத்தார்.

தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து நாட்டைக் கட்டியெழுப்ப முன்வருமாறு அநுரகுமார திஸாநாயக்க அழைப்பு விடுத்துள்ள நிலையிலேயே, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தரப்பில் இருந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இனிவரும் நாள்களில் இறுக்கமான தீர்மானம்! சந்திரசேன எச்சரிக்கை

Leave a Reply