இரத்தினபுரி, வெலிகேபொல பிரதேசத்தில், யானை தாக்கி வயோதிபர் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
வெலிகேபொல பிரதேசத்தைச் சேர்ந்த 75 வயது நபரே இவ்வாறு உயிரிழந்தார்.
வீட்டின் வளாகத்தில் இருக்கும்போதே, அவர் யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
பிரேத பரிசோதனைக்காக வெலிகேபொல வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில், வெலிகேபொல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





