எரிவாயு நிறுவனங்களை மூட நேரிடும்! அமைச்சர் லசந்த எச்சரிக்கை

எரிவாயு நிறுவனங்களை மூட நேரிடும் என நுகர்வோர் விவகார அமைச்சர் லசந்த அழகியவன்ன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தேவை ஏற்பட்டால் நிறுவனங்களை மூடி விடவும் தயங்கப் போவதில்லை. நாடு முழுவதிலும் எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகி வருகின்றது.

வாடிக்கையாளர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தாது, மெத்தனப் போக்கில் எரிவாயு நிறுவனங்கள் செயற்பட்டால் அவற்றை மூடுவதற்கு பின்நிற்கப் போவதில்லை.

எரிவாயு வெடிப்புச் சம்பவங்களை தடுக்கும் நோக்கில் நீண்ட கால அடிப்படையிலான நடவடிக்கைகள் எடுக்கப்படும். எதிர்வரும் மூன்று மாதங்களில் இந்த நடவடிக்கைகள் அமுல்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடாத்துமாறு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவினால் எரிவாயு சேர்மானத்தில் பிரச்சினை காணப்படுவதாக அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், அமைச்சர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் கைது!

Leave a Reply