வடக்கின் நிர்வாக மொழி தமிழா! சந்தேகம் என்கிறார் சிவஞானம்

வடக்கு மாகாணத்தில் தற்போது நிர்வாக மொழி தமிழ் மொழியா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடாக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடாக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாம் எங்கள் பிரச்சினையை கூறுவதற்கு, அழுவதற்கு, கொட்டி தீர்ப்பதற்கு ஒரு சபை வேண்டும். நாடாளுமன்றம் அதற்கு போதாது.

எங்களுக்கு மாகாண சபைகளை தாருங்கள். தேர்தலை இழுபட வைத்து எம்மை மத்தியின் கீழ் கொண்டு செல்ல முயற்சிக்க வேண்டாம்.

இப்போது வடக்கில் சிங்கள இனத்தவர்கள் முக்கிய பதவிகளுக்கு அமர்த்தப்படுகின்றனர். இதனால் நாம் எமது பிரச்சினைகளை வெளிப்படுத்த முடியவில்லை. இதனால் எமது நிர்வாக மொழி தமிழ் தானா என்று எண்ணத் தோன்றுகிறது.

நாம் முன்னெடுக்கும் தமிழ் கட்சிகளின் கூட்டத்திற்கு மக்கள் முன்னணியினர் கலந்து கொள்ளவில்லை. அது அவர்களின் விருப்பம். அவர்களின் கொள்கை. நாம் யாரையும் வற்புறுத்த முடியாது.

அரசியல் தீர்வு எமக்கு வேண்டும். இல்லையேல் இந்த மண் முழுமையாக சிங்கள பௌத்த ஆதிக்கத்துக்குள் செல்லும். நாம் அனைத்து நாடுகளின் உதவிகளையும் ஏற்கின்றோம். ஒரு நாட்டை நிராகரித்து, இன்னமொரு நாட்டை ஆதரிக்க மாட்டோம்.

சீனா யாழ்ப்பாணத்தில் கால் பதித்தால் இந்தியாவுடான உறவு பாதிக்கும் என்றால் அவர்களையும் நாம் ஆதரிக்க மாட்டோம். இந்த விடயத்தில் நாம் தீர்மானம் எடுக்க மாட்டோம். இது இரண்டு நாடுகளுக்கும் இடையேயான உறவு என தெரிவித்துள்ளார்.

இரவில் மக்கள் தூங்கும்போது பொருட்களின் விலைகளை அதிகரிப்பது அரசாங்கத்தின் சமீபத்திய கொள்கை! எதிர்க்கட்சி

Leave a Reply