மறைந்தார் மதுசூதனன்-நொறுங்கிப் போன அதிமுக தொண்டர்கள்!

அதிமுக முன்னாள் அமைச்சர் மதுசூதனன் சென்னையில் இன்று வியாழக்கிழமை காலமானார்.

முன்னாள் அமைச்சரும், அதிமுக அவைத்தலைவருமான இ.மதுசூதனன் (வயது 80) கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சைக்கு பின்னர் அவர் உடல்நலம் தேறினார்.

மேலும் அதன் பிறகு, வயது முதிர்வின் காரணமாக அவர் அரசியல் பணிகளிலிருந்து ஒதுங்கினார். சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் தொடர்ந்து ஓய்விலிருந்து வந்தார்.

எனினும், அவ்வப்போது அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்தார். இதற்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்

இந்நிலையில், மதுசூதனன் உடல்நிலை திடீரென மோசம் அடைந்தது. இதையடுத்து அவர், சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். எனினும், மதுசூதனன் இன்று பிற்பகல் 3.42 மணிக்கு சிகிச்சை பலனின்றி காலமானார்.

மேலும் கடந்த 1991ம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் அமைச்சராக பணியாற்றியவர் மதுசூதனன்.

அத்தோடு கடந்த 2010ம் ஆண்டு முதல் அதிமுக அவைத் தலைவர் பதவியை வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply