கொரோனா தொற்றால் மக்களின் அன்றாட வாழ்வாதாரம் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு மக்களின் அன்றாட வாழ்வாதாரத்தினை உயர்த்தும் நிகழ்ச்சிதிட்டமாக அமைந்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
யாழ். பிரதேச செயலப்பிரிவிற்குட்பட்ட யாழ். மணியந்தோட்டம் பகுதியின் கடற்றொழிலாளர் சமூகமட்ட மக்களுடான சந்திப்பு இன்று மணியந்தோட்டம் சன சமூக நிலையத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன் போது கருத்துதெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த கால அரசாங்கத்தில் மக்கள் நலனில் அக்கறை இன்றி செயற்பட்டதன் காரணமாக தான் மக்களின் வாழ்வாதாரத்தில் பின்னடைவுக்கான நிலை எற்பட்டுள்ளது.
தற்போது எமது அரசாங்கம் என்ற வகையில் எதிர்வரும் ஆண்டு மிகசிறந்தாக அமையும் என எதிர்பார்க்கின்றேன் என்று அவர் தெரிவித்தார்.
இதன்போது மணியந்தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தினை கட்டியேழும்பு இறங்குதுறைக்கான மீன் வாடி நிலைமையினையும் அவதானித்தார்.
இதில் கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களப்பணிப்பாளர் எஸ்.சுதாகர் உள்ளிட்ட அலுவலகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.





