சீன உரத்தில் பக்டீரியா இல்லையாம்! சிங்கப்பூர் கண்டுபிடிப்பு

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டஉரத்தில் தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்கள் உள்ளதாக தெரிவித்து திருப்பி அனுப்பப்பட்ட நிலையில், குறித்த உரம் தரமானது என சிங்கப்பூர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாட்டில் இராசயன உரத்தை தடை செய்து, இயற்கை உரத்தை பயன்படுத்தி உற்பத்திகள் மேற்கொள்ள வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், சீனாவில் இருந்து ஒருதொகை இயற்கை உரம் கப்பல் ஊடாக கடந்த மாத்தளவில் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்டுள்ள பரிசோதனையில் குறித்த சீன உரத்தில் தீங்கு விளைவிக்கும் பக்டீரியா உள்ளதாக கண்டறியப்பட்டு, உரம் திருப்பி அனுப்பப்பட்டது.

நாட்டிலிருந்து உரக்கப்பல் சிங்கப்பூர் நோக்கி சென்றுள்ள நிலையில், குறித்த உரம் தரமானது என சிங்கப்பூர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்படாத உரத்துக்கு அரசாங்கம், சீன நிறுவனத்துக்கு நட்ட ஈடு வழங்குவதற்கு முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply