ஒமிக்ரான் அடுத்த மூன்று வாரங்களில் வேகமாக பரவும்! சுகாதார தரப்பு எச்சரிக்கை

அடுத்த மூன்று வாரங்களில் ஒமிக்ரான் திரிபு இலங்கையில் வேகமாக பரவும் தொற்றாக மாறும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன இதனை தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும், நேற்று புதிதாக இனங்காணப்பட்ட 3 தொற்றாளர்கள் உள்ளிட்ட இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள 7 ஒமிக்ரான் தொற்றாளர்கள் சமூகத்திற்கு வெளிப்பட்டமை தொடர்பான ஆய்வின் மூலம் இது தெளிவாகிறது.

இந்நிலையில், எதிர்காலத்தில் நாடு மிகவும் துரதிஸ்டமான நிலைமையாக மாறாமல் தடுக்க பண்டிகைக் காலங்களில் மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டுமென உபுல் ரோஹன கோரிக்கை விடுத்துள்ளார்.

சீன உரத்தில் பக்டீரியா இல்லையாம்! சிங்கப்பூர் கண்டுபிடிப்பு

Leave a Reply