மனைவியை கொன்ற நபரை 14 ஆண்டுகளின் பின்னர் பொலிஸார் கைது செய்த சம்பவம் நுவரெலியாவில் பதிவாகியுள்ளது.
குறித்த கொலை கடந்த 2007 ஆம் ஆண்டு இடம்பெற்றுள்ளது.
14 வருடங்களின் பின்னர் சந்தேகநபரான கணவர், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற் கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கடந்த 2007 ஆம் ஆண்டு தலவாக்கலைத் தபால் நிலையத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.
எனினும், குறித்த கொலை சம்பவத்தில் தலவாக்கலை வட்டகொட தோட்டத்தில் வசித்து வந்துள்ளார்.
சந்தேக நபரின் தாக்குதலுக்கு உள்ளாகி மனைவி உயிரிழந்த சந்தர்ப்பத்தில் அவருக்கு 49 வயது என தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து, குறித்த சம்பவம் தொடர்பாக கடந்த 2009 ஆம் ஆண்டு நுவரெலியா நீதவான் நீதிமன்றம் வெளியிட்ட அறிக்கையின் படி கொழும்பு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்தது.
இதன்போது, 74 வயதான சந்தேகநபர் எம்பிலிபிட்டிய துங்கம பிரதேசத்தில் 14 வருடங்களாகத் தங்கியிருந்தமை பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இதேவேளை, கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்று நுவரெலியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





