பாடசாலை வாகனத்தின் கட்டணம் அதிகரிப்பு?

பாடசாலை வாகனத்தின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என அகில இலங்கை பாடசாலை வான் நடத்துநர்கள் சங்கம் இன்று தெரிவித்துள்ளது.

எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ள நிலையில், அடுத்த வருடத்தின் முதலாம் தவணை தொடக்கத்தில் இருந்து வான் கட்டணம் அதிகரிக்கப்படும் என அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

எரிபொருள் விலையேற்றத்தால் சேவையில் தொடர்ந்து ஈடுபட முடியாதுள்ளதாக அந்தச் சங்கத்தின் தலைவர் மல்சிறி டி சில்வா தெரிவித்துள்ளார்.

எனவே, இம்மாத இறுதியில் இந்த விடயம் குறித்து பெற்றோரிடம் தெரிவிக்க முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த இந்தியாவிற்கு பயணம்!

Leave a Reply