ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் உடையாது ,கட்சி என்றால் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கத் தான் செய்யும் என எதிர்க் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி வீழ்ச்சிக்கு ஒரே காரணம் ரணில் விக்கிரமசிங்கதான்.
ஆனால் ஐக்கிய மக்கள் சக்தி அவ்வாறு இல்லை. ஐக்கிய மக்கள் சக்தி கட்சி உடையும் ,என்று பலர் புரளியை கிளப்பியுள்ளனர். நம் கையில் உள்ள ஐந்து விரலும் ஐந்து விதம். அதற்காக ஏன் கட்சி உடைய வேண்டும்.
எதிர் கட்சி என்ற முறையில், மக்களிற்கு செய்யும் அனைத்து பணிகளையும் நாம் செய்யது முடிப்போம்.
அரசாங்கம்தான் வீழ்ந்து கொண்டு வருகிறது. ஆளும் கட்சியில் உள்ளவர்களே விழுவதற்கு முன் நிற்கின்றனர்.
இந்த நிலையில் சரியான ஆலோசனைகளை பெற்று மக்களுக்கு முறையான தீர்வுகளை வழங்குவோம் தெரிவித்துள்ளார்.





